ஷாட்ஸ்

தமிழ்நாடு தலையாட்டி பொம்மை அல்ல: அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்

Published On 2023-08-05 16:54 IST   |   Update On 2023-08-05 16:55:00 IST

எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கண்டனம் தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ''மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்கு கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல.

தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜனதாவின் பசப்பு அரசியல். 1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News