ஷாட்ஸ்
ஜனநாயகம், சமூக நீதியைக் காப்பாற்ற பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
திருச்சி ராம்ஜி நகரில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், இந்தியாவின் கட்டமைப்பை பா.ஜ.க. சிதைத்துவிட்டது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இல்லையெனில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது என்றார்.