ஷாட்ஸ்
ரூ.400-க்கு கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும்: தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் வாக்குறுதி
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தெலுங்கானாவில் ஆளுங்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அப்போது பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.400 விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படும் என்றார்.