ஷாட்ஸ்
சிலிண்டர் விலை உயர்வு.. சிறு வணிகர்கள் மீது தாக்குதலாக அமைந்துள்ளது.. உதயநிதி ஸ்டாலின்
வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு குறித்து எக்ஸ் பதிவில் கண்டனம் தெரிவித்து இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.203 கூடுதலாக ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலையேற்றம், உணவகங்கள் - தேநீர் கடைகள் வைத்திருப்போர் என சிறு வணிகர்களை பெரிதும் பாதிப்படையச் செய்யும்," என்று குறிப்பிட்டுள்ளார்.