ஷாட்ஸ்

பேச்சுவார்த்தை தோல்வி.. போராட்டம் தொடரும் என ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

Published On 2023-10-02 17:51 IST   |   Update On 2023-10-02 17:53:00 IST

சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றனர். இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆசிரியர்கள், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசி அவர்கள், "உங்களின் கோரிக்கைகளை முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்து விரைவில் முடிவை அறிவிக்கிறோம் என அமைச்சர் தெரிவித்தார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று இன்று இரவே அறிவித்தால் போராட்டத்தை வாபஸ் பெற தயார். அதுவரை ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்," என்று தெரிவித்து உள்ளனர்.

Similar News