ஷாட்ஸ்
திடீர் மழை.. மாறிய கிளைமேட்.. குளு குளுவான சென்னை
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், ஆலந்தூர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. திடீர் மேகமூட்டம் மற்றும் மழை காரணமாக நகரின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் மழையால் நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.