ஷாட்ஸ்
ஆளுநர் கடித விவகாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் கடிதம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆளுநர் கடித விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.