ஷாட்ஸ்
நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரை இறங்கும் பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும்: இஸ்ரோ அறிவிப்பு
தானியங்கி தரை இறங்கும் வரிசையை தொடங்க அனைத்தும் தயாராக உள்ளது. நிலவில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் லேண்டர் தரை இறங்கும் பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும். இந்த பணி தொடங்கியவுடன் விஞ்ஞானிகள் குழு கட்டளைகளை வரிசையாக செயல்படுத்துவதை உறுதி செய்து கொண்டே இருக்கும் என இஸ்ரோ கூறியுள்ளது.