ஷாட்ஸ்
தங்கம் தென்னரசு- பி.சி.ஸ்ரீராம்
பிரபல ஒளிப்பதிவாளர் வைத்த குற்றச்சாட்டு.. உடனே பதிலளித்த அமைச்சர்
பிரபல ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் பல சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். இவர் தனது சமூக வலைதளத்தில் சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் ஒரு நாளிலேயே மின்சார விநியோகத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளது. மின்சாரத் துறையின் செயல்பாட்டிற்கு என்ன நேர்ந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தப்படும். நகரம் முழுவதும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதால் இது போல் நடக்கிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.