ஷாட்ஸ்
I.N.D.I.A.வில் நீங்கள், ஆனால் இந்தியா உங்களுடன் இல்லை- மம்தா பானர்ஜி மீது பா.ஜனதா தலைவர் தாக்கு
மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தலைவர் சுகந்தா முஜும்தார், I.N.D.I.A. கூட்டணியில் நீங்கள் உள்ளீர்கள், ஆனால், இந்தியா உங்களுடன் இல்லை என மம்மா பானர்ஜி குறித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகந்தா மஜும்தார் கூறுகையில் ''நீங்கள் (மம்தா பானர்ஜி) I.N.D.I.A. கூட்டணியில் உள்ளீர்கள். ஆனால், இந்தியா உங்களோடு இல்லை. இந்தியா மோடியுடன் உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். அதை மம்தா பானர்ஜியால் தடுத்து நிறுத்த இயலாது. உங்களுடைய ஊழல் பற்றி மேற்கு வங்காள மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். நேரம் வரும்போது அவர்கள் உங்களை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவார்கள்'' என்றார்.