ஷாட்ஸ்
இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பு - சீன பயணத்தை ரத்து செய்தார் அனுராக் தாக்குர்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்தது. இதனால் சீனாவிற்கு இந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் தனது சீன பயணத்தை ரத்து செய்தார்.