ஷாட்ஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

Published On 2023-10-01 14:08 IST   |   Update On 2023-10-01 14:09:00 IST

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசனின் உருவ சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு குடும்பத்தினர், திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் சிவாஜிக்கு மரியாதை செலுத்தினர்.

Similar News