ஷாட்ஸ்
நான் நெருப்புடா - அஜித் பவாருக்கு மீண்டும் பதிலடி கொடுத்த சரத் பவார்
தேசியவாத காங்கிரசில் இருந்து விலகிய அஜித் பவார், சரத் பவார் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார். இதற்கு பதிலளித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், நான் சோர்வடையவில்லை, ஓய்வு பெறவில்லை. நெருப்பு போல் வேலை செய்துவருகிறேன். மொரார்ஜி தேசாய் எந்த வயதில் பிரதமரானார்? நான் பிரதமராகவோ, மந்திரியாகவோ ஆசைப்படவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன் என்றார்.