ஷாட்ஸ்
செந்தில் பாலாஜிக்கு நாளை காலை பைபாஸ் அறுவை சிகிச்சை
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதால் பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி நாளை அதிகாலை 4 மணியளவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.