ஷாட்ஸ்
காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி அவர் உடனடியாக புழல் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதல் வகுப்பு அறை வழங்கப்படுகிறது.