ஷாட்ஸ்
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்- ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.