ஷாட்ஸ்
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு - வரும் 11ம் தேதி விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பிலும், செந்தில் பாலாஜி மனைவி சார்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் 11, 12ம் தேதிகளில் விசாரணை நடைபெறும் என மூன்றாவது நீதிபதி தெரிவித்தார்.