ஷாட்ஸ்
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக ஏற்க முடியாது.. ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கான இலாகா மாற்றம், கூடுதல் இலாகா ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது தொடர்பான பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார். செந்தில் பாலாஜி மீது மோசடி வழக்கும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதால், அமைச்சராக தொடர முடியாது என ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார்.