ஷாட்ஸ்
புழல் சிறை மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதி
இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் 26ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி அவர் உடனடியாக புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.