ஷாட்ஸ்
மாநிலங்களவையில் குறுகிய கால விவாதத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள்
மாநிலங்களவையில் இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குறுகிய நேரம் விவாதிக்க அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விதி எண் 267ன் கீழ் அவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீண்ட நேரம் விவாதிக்கவேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னரும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகள் 3.30 வரை ஒத்திவைக்கப்பட்டன.