ஷாட்ஸ்
பூண்டி ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஆந்திரா மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏரியின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 35 அடியை எட்டிவிடும் என்பதால் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று மாலை 4 மணியளவில் 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் எனவும், கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.