ஷாட்ஸ்

கோப்புப் படம் 

குடையை கையோட கொண்டுபோங்க.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Published On 2023-08-15 20:51 IST   |   Update On 2023-08-15 20:53:00 IST

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, கரூர் மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. 

Similar News