ஷாட்ஸ்
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார்- எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அமித் ஷா கடிதம்
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு அரசு தயாராக உள்ளது என்று இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மக்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார். இந்த முக்கியமான விஷயம் குறித்து விவாதம் நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.