ஷாட்ஸ்

சீனா வரைபடம் குறித்து மோடி ஏதாவது பேச வேண்டும்: ராகுல் காந்தி

Published On 2023-08-30 07:58 IST   |   Update On 2023-08-30 07:58:00 IST

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தை இணைத்து சீனா 2023 வரைபடத்தை வெளியிட்டுள்ளது. லடாக்கில் இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று மோடி கூறுவது பொய் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். சீனா அத்துமீறி நடந்த கொண்டது ஒட்டுமொத்த லடாக்கிற்கே தெரியும். இந்த வரைபடம் விசயம் முக்கியமானது. அவர்கள் நமது நிலத்தை எடுத்து விட்டார்கள். இதுகுறித்து பிரதமர் மோடி ஏதாவது பேச வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Similar News