ஷாட்ஸ்
புதுவை பெண் அமைச்சர் திடீர் ராஜினாமா: பரபரப்பு தகவல்கள்
புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புதுவையில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திர பிரியங்கா போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இவரிடம் போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலம், வீட்டுவசதி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, கலைப்பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் இருந்தன. இந்நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.