ஷாட்ஸ்

ஏதென்ஸில் இருந்து நேராக பெங்களூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி

Published On 2023-08-26 06:29 IST   |   Update On 2023-08-26 06:30:00 IST

பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். நேற்று கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்து தாயகம் புறப்பட்டார். வழக்கமாக அவர் டெல்லி வந்து இறங்குவார். இந்தமுறை நேராக பெங்களூர் வந்தடைந்தார். பெங்களூர் வந்துள்ள பிரதமர் மோடி, சந்திரயான் 3 வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்கிறார். அப்போது அவர்களுடன் உரையாட இருக்கிறார்.

Similar News