ஷாட்ஸ்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - அரையிறுதிக்கு முன்னேறினார் எச்.எஸ்.பிரனாய்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார். இதில் பிரனாய் 13-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.