ஷாட்ஸ்
பொங்கல் பண்டிகை: ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக அதாவது ஜனவரி 11-ந்தேதி ரெயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்றும், ஜனவரி 12-ந்தேதி பயணம் செய்ய நாளையும் (14-ந்தேதி), ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய 15-ந்தேதியும், ஜனவரி 14-ந்தேதி பயணம் செய்பவர்கள் 16-ந்தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ரெயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் அல்லது முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யலாம்.