ஷாட்ஸ்
கெய்ரோ சென்றடைந்தார் பிரதமர் மோடி - விமான நிலையத்தில் வரவேற்ற எகிப்து பிரதமர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டுச் சென்றார். எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் எகிப்து பிரதமர் முஸ்தபா மாட்போலி உற்சாகமாக வரவேற்றார். எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.