ஷாட்ஸ்
கிரீஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது
தென்ஆப்பிரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு கிரீஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜார்ஜ் ஜெராபெட்ரிட்டிஸ் வரவேற்றார். கிரீஸ் அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோ, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, கிரீஸ் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் கேத்ரினா வழங்கி கவுரவித்தார்.