ஷாட்ஸ்
அனைவருக்குமான அனைத்து பகுதிகளுக்குமான முன்னேற்றமே நமது இலக்கு- பிரதமர் மோடி
பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார்.
பிரதமர் மோடி உரையின் முக்கியம்சங்கள்:-
* இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி பாராட்டும் வகையில் உள்ளது.
* வளர்ந்த நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களில் கூட டிஜிடடல் வளர்ச்சி உள்ளது.
* நாட்டின் கனவுகளை நனவாக்குவதற்கான திறன் நம்மிடம் உள்ளது.
* சிறிய நகரங்களின் இளைஞர்கள் கூட தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என காட்டியுள்ளனர்.
* உலகளவில் முன்பிருந்த நிலைமைகள் மாறிவிட்டன.
* நாட்டின் ஒவ்வொரு பகுதியும் சமமாக வளர்ச்சியடைவதே சரியான முன்னேற்றம்
* அனைவருக்குமான அனைத்து பகுதிகளுக்குமான முன்னேற்றமே நமது இலக்கு
* புதிய இந்தியா தடுக்க முடியாதது, வெல்ல முடியாதது.