ஷாட்ஸ்
பாதயாத்திரை தொடக்க விழா - எடப்பாடி பழனிச்சாமிக்கு பா.ஜ.க. அழைப்பு
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் ஜூலை 28-ம் தேதி பாத யாத்திரை செல்ல முடிவுசெய்துள்ளார். இந்த பாதயாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். ராமேசுவரத்தில் தொடங்கும் பாதயாத்திரையின் முதல் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக சார்பில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டது.