ஷாட்ஸ்
சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் நடைபெற்ற கார் வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்த முக்கிய குற்றவாளி படித்து வந்த கல்லூரியில் தீவிரவாத செயலுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வந்ததாகவும், அந்த கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் அதில் தொடர்புடைய 30 பேர் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.