ஷாட்ஸ்
டிஎன்பிஎல்- மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி நெல்லை கிங்ஸ் குவாலிபையர் சுற்றுக்கு முன்னேற்றம்
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை குவித்தது. ஆனால், மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் நெல்லை கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் ச்சுற்றுக்கு முன்னேறியது.