ஷாட்ஸ்

டைமண்ட் லீக் தடகள போட்டி - 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா

Published On 2023-07-01 02:15 IST   |   Update On 2023-07-01 02:16:00 IST

டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடந்தது. இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். அவர் 87.66 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம் டைமண்ட் லீக் தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Similar News