ஷாட்ஸ்
மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம்- முதலமைச்சர் நாளை ஆலோசனை
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது.