ஷாட்ஸ்
கள்ளச்சாராயம், போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதை பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். அதுதொடர்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பொய்ச்செய்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.