ஷாட்ஸ்
இரு மாநிலங்களும் நட்புடன் இருப்பது அவசியம்: அமைச்சர் துரைமுருகன்
கர்நாடகம் நம்மைவிட்டு வெகு தூரத்தில் இல்லை. ஒரே தெருவில் அந்த பகுதி கர்நாடகா என்றால் இந்த பக்கம் தமிழ்நாடு. எனவே மனம் ஒத்து நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற எண்ணம் இருக்க வேண்டும். ஏதோ தனிநாட்டில் வாழ்வதை போல் இப்படிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது சரியல்ல என்பதுதான் எனது கருத்து என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.