ஷாட்ஸ்
மணிப்பூரில் பரபரப்பு - பா.ஜ.க. அலுவலகம் முன் கூடிய கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு
இம்பாலில் உள்ள பா.ஜ.க.வின் பிராந்திய அலுவலகம் அருகே இன்று மாலை ஏராளமானோர் திரண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி கலைக்க போலீசார் பல சுற்று கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கூட்டம் கலைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.