ஷாட்ஸ்
மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை- கைதான குற்றவாளியின் வீடு தீ வைத்து எரிப்பு- 657 பேரை பிடித்து விசாரணை
மணிப்பூர் வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய நபரான ஹூப்ரீம் ஹிரதாஷ் சிங் கைது செய்யப்பட்டார். நேற்று இரவு அவனது வீட்டை சூழ்ந்த மர்ம நபர்கள் பெட்ரோல் வீசி தீ வைத்து எரித்தனர். வீடியோவில் இடம் பெற்றுள்ள கும்பலில் உள்ளவர்களில் பலர் தலைமறைவாகி விட்டனர். இன்று காலை வரை 657 பேரை பிடித்து விசாரித்து வருவதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.