ஷாட்ஸ்
சாய் சுதர்சன் அபாரம் - 59 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல்லை வீழ்த்தியது கோவை
சேலத்தில் இன்று நடந்த முதல் டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 83 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய திண்டுக்கல் 147 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் கோவை 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.