ஷாட்ஸ்
null
சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி 24-ந்தேதி சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்றுகிறது ஜப்பான்
புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் விட மீனவர்கள் மற்றும் சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்தது. ஆனால், ஜப்பான் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வந்தது. சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பும் ஜப்பானுக்கு பச்சைக்கொடி காட்டியது. இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் கடலில் விட இருப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது.