ஷாட்ஸ்
அறிமுக டெஸ்டில் ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தல் - வலுவான நிலையில் இந்தியா
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் நாள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. 2வது நாளான இன்று இந்திய அணியின் அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார்.