ஷாட்ஸ்
ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றி - இஸ்ரோ தலைவர்பெருமிதம்
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்கலன் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. ராக்கெட்டில் இருந்து மாதிரி விண்கலம் திட்டமிட்டப்படி பிரிந்தது. மாதிரி விண்கலத்தின் பாராசூட் விரிந்த நிலையில் தரையிறங்கியது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் கூறுகையில், மாதிரி விண்கலத்தின் சோதனை ஓட்டம் அனைத்து நிலைகளிலும் வெற்றிகரமாக நடந்தது என தெரிவித்தார்.