ஷாட்ஸ்
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் முன் எடுத்த புகைப்படம் - இஸ்ரோ வெளியீடு
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டரில் உள்ள இமேஜர் கேமரா நிலவில் லேண்டர் தரையிறங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டது. அதில் பல இடங்களில் சிறிய மற்றும் பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனை இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது.