ஷாட்ஸ்
முதல் டி20 போட்டி - தாமதமாக பந்துவீசிய இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு அபராதம்
டிரினிடாடில் நடந்த இந்தியா, வெஸ்ட் இண்டீசுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவீதமும், வெஸ்ட் இண்டீசுக்கு 10 சதவீதமும் அபராதம் விதித்தது ஐசிசி.