ஷாட்ஸ்
உலகின் வளர்ச்சி எந்திரமாக இந்தியா உருவெடுக்கும் - பிரதமர் மோடி பேச்சு
15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்கா சென்றார். அங்கு பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. உலகின் வளர்ச்சி எந்திரமாக இந்தியா உருவெடுக்கும் என்றார்.