ஷாட்ஸ்
இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர் - இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட இந்தியா, இங்கிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமின் எட்ஜ்பஸ்டனில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.