ஷாட்ஸ்
பார்த்து கவனமா இருங்க.. கனடா வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை!
கனடாவில் வாழும் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. "இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாலும், அரசியல் காரணங்களுக்காக இந்தியர்களுக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாலும், கனடாவில் வாழும் இந்தியர்கள் மற்றும் கனடா செல்ல திட்டமிட்டு இருக்கும் பயணிகளும் கவனமுடன் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என்று மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.