ஷாட்ஸ்
ஜூலை 11ம் தேதி நடைபெற இருந்த இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை
இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலை ஜூலை 11-ம் தேதி நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் திட்டமிட்டது. இந்நிலையில், மல்யுத்த சம்மேளன தேர்தலை எதிர்த்து அசாம் மல்யுத்த சங்கம் கவுகாத்தி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த கவுகாத்தி ஐகோர்ட், ஜூலை 11ம் தேதி நடைபெற இருந்த இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.